உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டார் தமிழ்மகன் உசேன்: ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு - MAKKAL NERAM

Breaking

Sunday, February 5, 2023

உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டார் தமிழ்மகன் உசேன்: ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு

 

அதிகாரப்பூர்வ வேட்பாளரை பொதுக்குழு தான் முடிவு செய்ய வேண்டும் என ஓ. பன்னீர் செல்வம் தரப்பு வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஓபிஸ் ஆதரவாளர்கள் பண்ருட்டிராமச்சந்திரன்,வைத்திலிங்கம் இன்று செய்தியாளர்ளை சந்தித்தனர். அப்போது பேசிய அவர் , ஆனால் தமிழமகன் உசேன் ஒருவரை அதிகாரப்பூரவமாக வேட்பாளரை அறிவிக்கிறார்.வேட்பாளர் அறிவிப்பு தமிழமகன் உசேன் ஏற்கனவே ஓரு முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது. அவர் செயல்படு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு முரணாக உள்ளது. அவை தலைவரின் செயல் ஏற்க முடியாதது .அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதத்தில் செந்தில் முருகன் பெயர் இடம் பெறவில்லை .வேட்பு மனு தாக்கல் செய்யாத தென்னரசு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. "உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை தமிழ்மகன் உசேன் நிராகரித்துள்ளார். வேட்பாளரை முன்மொழியவும், வழிமொழிவதற்குமான எந்த படிவத்தையும் எங்களுக்கு அனுப்பவில்லை .இதர வேட்பாளர்கள் போட்டியிடும் உரிமையை தட்டிப் பறிக்கும் அதிகாரம் அவைத் தலைவருக்கு இல்லை. ஒருவரை மட்டும் வேட்பாளராக அறிவித்து அவரை ஆதரிக்கிறீர்களா என கேட்டு கடிதம் அனுப்பியது முறையான செயல் கிடையாது.

No comments:

Post a Comment