• Breaking News

    ஐந்தறிவு ஜீவனை அடக்கி கொடுமை செய்யும் ஆறறிவுள்ள மனிதன்

     

    திருநெல்வேலி மாவட்ட பகுதியில் பல உயிர்களை காவு வாங்க நினைக்கும் தனியார் யானை உரிமையாளருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்பா? யானையின் குற்ற செயல்களை பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு பேசியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திருநெல்வேலி சுற்று வட்டார மக்களின் பேச்சு... திருநெல்வேலி மாவட்ட வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் தனியார்பெண் யானை  ஒன்று தமிழக வனத்துறையில் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் திருவிழா மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்று வருகிறது.சில மாதங்களுக்கு முன் யானையின் பாகனின் கையை உடைத்து உள்ளது. இரண்டு கண்களும் பார்வை இல்லாத யானையை வைத்து கொடுமை செய்து வரும் யானையின் உரிமையாளர் மற்றும் குத்தகை தாரர் ஆகியோருக்கு தகுந்த தண்டனை அளித்து சுந்தரி என்னும் பெண் யானையை தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முகாமில் வைத்து யானை உயிர் உள்ளவரை பராமரிக்க வலியுறுத்தி திருநெல்வேலி சுற்று வட்டார மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    No comments