மேல்மா-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் ஆலோசனை கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மேல்மா-சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ ஜோதி மக்கள் விரோத செயலை கண்டித்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே சந்தித்து மனு அளித்த போது அவர் சொன்னது போல குழு அமைக்காமல் தொடர்ந்து நிலம் கையகப்படுத்த ஆயத்தம் ஆவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு மேல்மா-சிப்காட் திட்டத்தால் நிலம் இழக்கும் பிற கிராமங்கலிலும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி இனி வரும் காலங்களில் மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சிப்காட் என்ற பெயரில் விவசாயிகளை அழிக்க நினைக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
No comments