விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் கூட்டுறவுத்துறை சார்பில் சுய உதவி குழு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் நடைபெற்றது.
இதில் 179 மகளிர் குழு, 1777 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன்தொகை 3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதற்கான சான்றிதழை சுய உதவிக் குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர்
தமிழக முதலமைச்சரின் மகளிர்க்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இதே மாதிரி, இதே மண்டபத்தில் இதே போல் ஒரு பெண்கள் கூட்டத்தை கூட்டி இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். பெண்களுக்கு கொடுக்கும் போது கூட அதை சலுகையாக கொடுக்க வேண்டும் என்று சொல்லல, பெண்களுக்கு உதவி தொகை என்று கூட சொல்லல, அதை எப்படி தமிழக முதலமைச்சர் சொன்னார் என்றால் பெண்களுக்கான உரிமைத்தொகை என்று சொன்னார். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக எனக்கான உரிமை, என்னுடைய உரிமை, அதற்கான உரிமை தொகை ரூபாய் 1000 இன்னும் மூன்று மாதத்தில் வழங்குவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது நமது விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 32 கோடி ரூபாய்க்கான சுய உதவி குழுவில் மகளிர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தற்போது திராவிட மாடல் ஆட்சியில் ஏராளமான தொழில் நமது பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பொருளாதாரம், இந்தியாவில் இருக்கக்கூடிய பொருளாதாரத்தில் இரண்டாவது இடத்தில் மிகப் பெரிய பொருளாதாரம் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இந்த தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம், இந்த விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளும் நமது தமிழ்நாட்டில் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளது. என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

0 Comments