அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.25 கோடிக்கு மேல் பணம் மோசடி செய்த விளாத்திகுளம் புதூர் அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது

 

                     அலெக்சாண்டர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (37) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அறிமுகமாகி  அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து மொத்தம் ரூபாய் 11,28,500 பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அம் மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு உள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொள் கையில் அலெக்ஸாண்டர் தூத்துக்குடி, திருநெல்வேலி சென்னை ஆகிய மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி ரூபாய் 1,26,68,500 வரை பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் திருமதி. நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. சண்முகசுந்தரம் மற்றும் திரு. மோகன்ஜோதி ஆகியோர்  அலெக்ஸாண்டரை விளாத்திகுளம் புதூரில் வைத்து கைது செய்து பேரூரணி சிறையிலடைத்தனர்.

Post a Comment

0 Comments