ஊத்தங்கரை அருகே தந்தை இறந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வெழுதிய மாணவர்... கல்லாவியில் கிராம மக்கள் நெகிழ்ச்சி...


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் கோடிஷ்வரன்.இவர் நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருந்தார். இவரது மகன் ஜெகத் கல்லாவி மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி படித்து வந்தார். தற்பொழுது பொது தேர்வு எழுதி வருகிறார். இந்த நிலையில் இரவு இவரது தந்தை உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். மாணவர் ஜெகத் தந்தை இறந்த நிலையிலும் ஆங்கிலம் தேர்வு எழுத வந்தார். அவரை சக மாணவர்கள்.பெற்றோர்கள். ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.தந்தை இறந்த துக்கம் ஒரு புறம் இருக்க.ஆண்டு  முழுவதும் படித்த படிப்பு வீணாகக்கூடாது என தேர்வு எழுத வந்தது குறிப்பிடத்தக்கது.உடன் நாட்டான்மை வெங்கடேசன். ஊர் தர்மகர்த்தா சுரேஷ் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments