தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம்,N.ஜெகவீரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.80-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.சசிகுமார், திரு.வெங்கடாசலம் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் மாவட்ட கவுன்சிலர் திரு.ஞானகுருசாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு.இம்மானுவேல் N.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.அழகுபாண்டி கூட்டுறவு சங்கத்தலைவர் திரு.கண்ணன் கூட்டுறவு சங்க செயலர் திரு.ராமச்சந்திரன் கிளைச் செயலாளர்கள் திரு.இளங்கோவன், திரு.பவுன்ராஜ்,திரு.பால்ச்சாமி, திரு.சென்னையன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.ராமமூர்த்தி, திரு.செல்வசீனிவாசகம் தகவல் தொழில்நுட்ப அணி திரு.காளிதாஸ் உட்பட கழக நிர்வாகிகள்,கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments