பிளஸ்-2 தேர்வு எழுத விண்ணப்பிருந்த நிலையில் மொழி பாடமான தமிழ் தேர்வு இன்று துவங்கியது‌

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் மாதம்  3-ந் தேதி வரை நடைபெற உள்ளது. நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் வழக்கமான காலை வழிபாட்டு கூட்டத்திற்கு பிறகு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அங்கு அறை கண்காணிப்பாளர் மாணவர்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்தனர். பொதுத்தேர்வு ஒட்டி மாணவர்களுக்கு ஏற்கனவே பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டுள்ள நிலையில் அதனை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments