தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு தண்டுபாளையம் பகுதியில் பாலமுருகன், கஜேந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு இருசக்கர மிதிவண்டி , ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிலான தென்னங்கிடுகு ஆகியவற்றுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன . இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனங்கள் ,இருசக்கர மிதிவண்டி மற்றும் தென்னங்கடுகு ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.இதுகுறித்து தென்கரை காவல்துறையினருக்கு பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் அளித்ததாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தென்கரை விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டறிய அப்பகுதிகளில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் சுமார் 20 குடும்பங்கள் ஐந்து தலைமுறையாக தென்னங்கிடுகு பின்னும் தொழில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது .

0 Comments