விருதுநகர் அருகே உள்ளது ஆவுடையாபுரம் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக வெற்றிலை விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டத்திலேயே இந்த கிராமத்தில் மட்டுமே வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது.
இந்த கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் வெற்றி விவசாயம் செய்யப்பட்டு வந்ததாகவும் நாளடைவில் அது சுருங்கி வெற்றிலை விவசாயம் குறைந்து விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இங்கு விளையும் வெற்றிலை தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை கன்னியாகுமரி ராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது இங்கு சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கூட்டுப் பண்ணை முறையில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக வெற்றிலை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதமடைந்துள்ளது இது வெற்றிலை விவசாயத்தை நம்பி அப்பகுதிரைச் சார்ந்த 300 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும் நிலையில் 40 லட்சம் மதிப்பிலான வெற்றிலை மரங்கள் சேதம் அடைந்துள்ளது இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூட்டுப் பண்ணையில் மூலம் விவசாயம் செய்யப்படுவதால் வெற்றிலைக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலை இருப்பதாகவும் ஆண்டுதோறும் இது போன்ற மழை மற்றும் சூறைக்காற்றால் இந்த இன்னலுக்கு வெற்றிலை விவசாயிகள் ஆளாபளாகவும் எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வெற்றி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கும் வெற்றிலை விவசாயத்தை காப்பதற்கு மிகப்பெரிய இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள ஆவுடையாபுரம் வெற்றிலை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments