தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே ஆர் குழுமம் கல்வித் தந்தை ராமசாமியின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது செண்பகவல்லி அம்மன் கோவிலில் முன்பு துவங்கிய இப் போட்டியை நாலாட்டின்புத்தூர் காவல் துணை ஆய்வாளர் ஆர்தர் ஜெஸ்டின் கொடியசைத்து துவக்கி வைத்தார் நகரின் முக்கிய பகுதியில் ஆன பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதி உள்ளிட்ட சாலை வழியாக சென்று கல்லூரியில் அமைந்துள்ள கே ஆர் மணிமண்டபத்தில் நிறைவடைந்தது சுமார் 5 கிலோ மீட்டர் அளவிலான இம் மாரத்தான் போட்டியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவன் பி.மனோஜ்குமார் முதல் பரிசு ரூ3,000ம் மற்றும் கேடயமும், அதே பள்ளி மாணவர்கள் பி.கருத்தப்பாண்டி இரண்டாவது பரிசு ரூ2,000ம் மற்றும் கேடயமும், எ.மாரிசெல்வம் மாணவன் 3வது பரிசு ரூ1,000ம் மற்றும் கேடயமும், ஆறுதல் பரிசாக 25 மாணவர்களுக்கு தலா ரூ.500 வீதமும் வழங்கப்பட்டது.

0 Comments