கோவில்பட்டி அருகே வடக்கு மயிலோடையில் 4 லட்ச ரூபாய் குடிநீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா



தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி, கயத்தாறு யூனியன், தெற்கு மயில் ஓடை பஞ்சாயத்து ,வடக்கு மயிலோடை கிராமத்து காலனியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சுமார் 4 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல் அமைத்து அதன் மூலம் நீர்த்தேக்க தொட்டி கட்டி அதன் மூலம் குடிநீர் வழங்குவதற்கான பணிக்கு அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்வில் வடக்கு மயில் ஓடை காலனி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments