ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரீடு நிறுவனமானது கடந்த 21 ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கும், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களின் நலனுக்காகவும் அரசுடன் இணைந்து பணி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரீடு நிறுவனம் எக்விடாஸ் வங்கியுடன் இணைந்து சத்தியமங்கலம் ஆணைக்கொம்பு மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் சென்னை, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம் ஒட்டியுள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்தது. இந்த மாபெரும் முகாமில் சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் ஜானகிராமசாமி, தமிழ் நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், சமூக ஆர்வலர்கள் ஸ்டாலின் சிவக்குமார், ஆணைக்கொம்பு ஶ்ரீ ராம், சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த வேலை வாய்ப்பு முகாமை ரீடு இயக்குனர் கருப்புசாமி தலைமை தாங்கி நடத்தினார். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பணி நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி
Monday, March 20, 2023
சத்தியமங்கலம் தனியார் வேலைவாய்ப்பு முகாம். 500க்கும் மேற்பட்டோர் தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment