மக்களை நாடி மருத்துவத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் - MAKKAL NERAM

Breaking

Monday, March 20, 2023

மக்களை நாடி மருத்துவத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம்


ஈரோடு  மாவட்டம், நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் என்.நல்லசிவம்  தலைமையில் நம்பியூர் ஒன்றிய  செயலாளரும், நம்பியூர்  பேரூராட்சி தலைவர் மெடிக்கல். ப. செந்தில்குமார்  பேரூராட்சி துணை  தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்  விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்படி,மக்களை நாடி மருத்துத்தின் கீழ் இலவச மருத்துவ முகாம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேலம் மற்றும் நம்பியூர் பேரூராட்சி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமில் நம்பியூர் ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றும், மேலும் சில பொதுமக்கள் சிலர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேல்கிச்சைக்காக பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின் போது  திமுக நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம்  செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment