தமிழக காவல் பணியில் பெண் காவலர்கள் 50வது வருடம்... சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடர் மிதிவண்டி பயணம் விருதுநகரில் வரவேற்பு...


தமிழக காவல்துறையில் பெண் காவலர்கள் கடந்த 1973ம்  வருடம் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் பணியமர்த்தப்பட்டனர். தற்போது அதன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ள நிலையில் பெண் காவலர்கள் பங்கேற்கும் தொடர் மிதிவண்டி பேரணி கடந்த 17ம் தேதி சென்னையில் இந்த தொடர் மிதிவண்டி பயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

 110 பெண் காவலர்கள் பங்குபெற்ற இந்த தொடர் மிதிவண்டி பயணம் சென்னை, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியாக நேற்று இரவு விருதுநகர் வந்தடைந்தது. அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் மற்றும்  ராஜபாளையம் சிறப்பு காவல் 11 ம் அணி பெண் காவலர்கள் அணி சார்பாக சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று காலை 110 பெண் காவலர்கள் பங்குபெற்று கன்னியாகுமரி வரை செல்லும் தொடர்  மிதிவண்டி பயணத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் அவர்கள் கொடியசைத்து துவங்கிவைத்தனர்.

இந்த தொடர் மிதிவண்டி பயணமானது சாத்தூர், கோவில் பட்டி, திருநெல்வேலி, வழியாக வருகின்றவரும் 27ம் தேதி கன்னியாகுமரியில் முடிவடைகிறது.

Post a Comment

0 Comments