திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் 79 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர் - MAKKAL NERAM

Breaking

Monday, March 20, 2023

திருத்துறைப்பூண்டி முள்ளாட்சி மாரியம்மன் ஆலயத்தில் 79 ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முள்ளாட்சி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா என்பது மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடம் 79 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது கடந்த ஐந்தாம் தேதி கொடி ஏற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழா 15 நாட்களும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்தல் மற்றும் ஆராதனை செய்தல் தினமும் சாமி புறப்பாடு மற்றும் வீதி உலா காட்சி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று காலை முதல் பால் காவடி அழகு காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்திய பின்னர் மகா மாரியம்மன் ஆகிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பாலாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து கோவிலின் எதிரே தீகுண்டங்கள் ஏற்றப்பட்டு திருத்துறைப்பூண்டி மட்டுமல்லாது திருவாரூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் இந்த தீமிதி திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment