கீழ்வேளூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ARV தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது

கீழ்வேளூர் வெள்ளை திடலில் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக திரிந்து வருகின்றன. இந்த நாய்கள் வயல்வெளிகளில்  செல்லும் ஆடுகளை கொன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் வெள்ளைத்தெருவில் வீட்டு வாசலில் நின்ற சரசு (65) அசோகன்(48) ஆகிய இரண்டு பேரையும் 4 நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதரின. இதில் படுகாயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக நாகை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நான்கு பேரை  தெருநாய்கள் கடித்துள்ளன. சாக்ரடீஸ் என்பவரது ஒரு ஆடும் ஆனந்த் என்பவருடைய 3 ஆடு சிவகுமார் என்பவருடைய ஒரு ஆட்டையும் நாய்கள் கடித்துள்ளன. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரு நாய்க்கு அச்சப்பட்டு வருகின்றனர். உடனே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து கீழ்வேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு ARV தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது. முகாமிற்கு கீழ்வேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமையிலும் செயல் அலுவலர் குகன் முன்னிலையிலும் நடைபெற்ற முகாமில் கீழ்வேளூர் கால்நடை மருத்துவமனை சார்பில் கால்நடை மருத்துவர் சிவபாலன் கலந்து கொண்டு பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் நாய் பிடிக்கும் பணியாளர்கள் உதவியுடன் தெரு நாய்களுக்கு  ARV தடுப்பூசி செலுத்தப்பட்டது தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை தொடர்ந்து  வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களுக்கு விரைவில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்படும் என கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்தார்.

Post a Comment

0 Comments