கிருஷ்ணகிரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக ரஜினி செல்வம் நியமனம்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த திருவனப்பட்டியை சேர்ந்தவர் ரஜினி செல்வம்.இவர் திமுகவில் தெற்கு ஒன்றிய செயலாளராகவும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.மேலும் திருவனபபட்டி ஊராட்சி மன்ற தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.அப்பகுதியில் பொதுமக்களிடம் நற்பெயரையும் பெற்று வருகிறார்.தமிழ்நாடு முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில்.மாண்புமிகு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனையில் .துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோரின் பரிந்துரைப்படி கிருஷ்ணகிரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு கட்சி பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments