பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் - அலுவலகம் முன்பு சிபிஎஸ்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரியும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோரியும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க கோரியும், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க தேனி மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமர் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மதுக் கண்ணன்,மாவட்ட துணை தலைவர் காளிதாஸ், மாவட்ட துணைச் செயலாளர் குமார்,மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேந்திரன், பெரியகுளம் வட்ட கிளை தலைவர் சுரேஷ்குமார், மற்றும் அனைத்து வட்ட கிளை பொறுப்பாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டனகோஷங்களை எழுப்பினர்.

தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிபாசு தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments