ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , இண்டியம் பாளையம் ஊராட்சி அரசூர் புதூரில் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சத்தியமங்கலம் ஒன்றிய குழு பெருந்தலைவரும் , சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே. சி .பி .இளங்கோ , சத்தியமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். ராஜம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா குழு சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. மற்றும் திமுக தெற்கு ஒன்றிய துணை செயலாளர் டி .பி. அசோகன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் என் .எஸ். விஸ்வநாதன் , அரசூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அரியப்பம்பாளையம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் டாக்டர் அ.க. சற்குணன் , அண்ணா நகர் செயலாளர் எஸ். சண்முகம் , அரசூர் புதூர் கிளை செயலாளர்கள் வி .தங்கவேலு , ஏ .ஆர் .முருகேசன் , கார்த்திகேயன் , நாய்க்கர் புதூர் செயலாளர் தேவராஜ் , கொத்துக்காடு சிவா மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments