ஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள இந்திரா நகர் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினரும், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் அ.பண்ணாரி எம்.எல். ஏ. அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பொதுமக்கள் விடுத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு. கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் உறுதி அளித்தார். உடன் கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா மற்றும் அஇஅதிமுக கிளை செயலாளர்கள், அஇஅதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் நிகழ்வின்போது உடனிருந்தனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments