பெரியகுளத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு


பெரியகுளம் நகராட்சியில் நேரு மகேந்திரா சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சிலம்பப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நிகழ்ச்சி மற்றும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வேறு யுவகேந்திரா அமைப்பின் துணை இயக்குனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பெரியகுளம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பெரியகுளம் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், நகர் நல சங்க தலைவர் அன்புக்கரசன், பெரியகுளம் விளையாட்டு கழக தலைவர் மணி கார்த்திக், மற்றும் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பள்ளி சிறுவர் சிறுமியர் மற்றும் மாணவ மாணவியர் என ஏராளமான கலந்துகொண்டு சிலம்பம் சுற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து மழைநீர் சேமிப்பு குறித்து கவிதை வாசித்தனர். இந்த நிகழ்வில் சிலம்பம் சுற்றிய பள்ளி மாணவ மாணவர்களுக்கு பரிசு பொருள்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்வின் நிறைவாக நேரு யுவகேந்திரா அலுவலக பணியாளர் நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments