தமிழகத்தில் ஏராளமான உணவகங்களில் சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவோருக்கு ஏற்படும் உபாதைகள் ஏற்படுவதை தடுக்க உணவு பாதுகப்பு அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் பொதுமக்கள் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்கள்,சாலையோர தள்ளு வண்டி உணவகங்களில் சுகாதாரமான குடிநீர் பயன்படுத்துவதில்லை. சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு வயிற்று போக்கு,வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தே பல வருடங்கள் ஆகிருக்கும். சிறிய உணவகங்களில் குடிநீர் தொட்டியை பார்த்தால் தூசிகள் நிறைந்த குடிநீர் தொட்டியாக உள்ளது. கை கழுவ வைத்திருக்கும் தண்ணீர் தொட்டியை சொல்லவே வேண்டாம். அவ்வளவு சுகாதாரமாக இருக்கும்.இதை விட மோசமான நிலையில் தான் சாலையோர தள்ளு வண்டி உணவகங்கள் உள்ளன. பொதுமக்களை பாதுகாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து சிறிய,பெரிய,தள்ளுவண்டி உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.தூக்கத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழித்துக் கொள்வார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.....

0 Comments