நாகை அருகே டாஸ்மாக் கடையில் பட்டாக் கத்தியை வீசி ஓசி சரக்கு வாங்கி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்


நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே தேவூர் ஊராட்சி சந்தைபேட்டையில் அரசு மதுபான கடை (டாஸ்மாக்) உள்ளது இந்த கடையில் விஜயகுமார் என்பவர் சூப்பர்வைசர் விற்பனையாளராக ரமேஷ் குமார்  செல்வம் பணிபுரிந்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று முன்தினம்  கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் சொட்டால்வண்ணம்  மெயின் ரோடு பகுதியை சேர்ந்த  அம்பேத்கர் மகன் அஜித் குமார் (வயது 27),ராதா மங்கலம் எறும்புக்கண்ணி மெயின் ரோட்டை சேர்ந்த மொட்ட முருகன் என்கிற முருகையன் மகன்கள் புகழேந்திரன் (28) தமிழ் குடிமகன்(29), பட்டமங்கலம் புழுதிக்குடியை சேர்ந்த தங்கமணி மகன் மணிமாறன் (21) நால்வரும் டாஸ்மாக் கடைக்கு சென்று ஓசியில் பீர் பிராந்தி பாட்டில்கள் கேட்டுள்ளனர். இதில் அஜித் குமார் தனது முதுகில் பின்புறம்  வைத்திருந்த பட்டாக்கத்தி எடுத்து விற்பனையாளர்கள் ரமேஷ் குமார், செல்வத்தை  ஓசியில் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவோம்  என்று அஜித் குமார் மிரட்டியும்,.விற்பனையாளர்கள் இருவரும் ரூ. 1850 மதிப்புள்ள பீர் மற்றும் பிராந்தி பாட்டில்களை  கொடுத்துள்ளனர். அருகில் இருந்த டாஸ்மாக் பார்  ஏலம் எடுத்து நடத்தி வரும்  செந்தில்  நான்கு பேரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளார் .நாலு பேர் கொண்ட கும்பல் மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டது.இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் விஜயகுமார் கீழ்வேளூர் போலீசில் புகார் செய்திருந்தார் இந்நிலையில்  இரவு 11 மணி அளவில்  நால்வரும்  பார் ஏலம் எடுத்து நடத்தி வரும்  செந்திலின் உறவினர் (சித்தப்பா மகன்) பாஸ்கரன் (50) இவர் நாகை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார் அவர் வீட்டிற்கு சென்ற நான்கு பேரும் பீர் பாட்டிலில் பெட்ரோல் வைத்து அவர் வீட்டில் வாசல் முன்புறம் உள்ள சுவற்றில்  பகுதியில் பெட்ரோல் குண்டு  வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர் . வீட்டின் முன்புறம் வாசல் நிலை கதவு பகுதியில்  சேதமடைந்தது.  பாஸ்கரன் வீட்டில் .பெட்ரோல் குண்டு வீசி விட்டு அந்த கும்பல் தப்பியது.

இதனுடைய வீடியோ பார்க்க கிளிக் செய்யுங்கள்

இது குறித்து தகவல் அறிந்த நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை  மேற்கொண்டனர் இது குறித்து சூப்பர்வைசர் விஜயகுமார் ,அரசு பஸ்  டிரைவர் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அஜித் குமார், புகழேந்திரன் , தமிழ் குடிமகன் மணிமாறன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்  மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த நிலையில் தேவூர் டாஸ்மாக் கடையில் பட்டாக் கத்தியை வீசி ஓசி சரக்கு வாங்கி செல்லும்  சிசிடிவி காட்சிகள் மற்றும் பட்டாக்கத்தி கொண்டு டாஸ்மாக் ஷட்டரை வெட்டியும், அடித்து உதைத்தும் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி அட்டகாசம் செய்யும் ரவுடிகள்  அச்சமடைந்த டாஸ்மாக் ஊழியர் பீர் பாட்டில் , சரக்கு பாட்டிலை எடுத்துக் கொடுக்க ரவுடிகள் பட்டா கத்தியை வீசி வீசி சரக்கு பாட்டில்களை வாங்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments