தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் 120 ஆண்டு கால பெரியகுளம் நகராட்சி வரலாற்றில் அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களால் நகர் பகுதியில் பொதுமக்களின் தேவை மற்றும் நலன் கருதி ஆழ்குழாய் மின் மோட்டார் உடன் அமைத்துக் கொடுத்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயற்கையாக உருவாக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடு ஆழ்துளை கிணறுகள் மூலம் போக்க பட்டது.கடந்த காலங்களில் பெரியகுளம் பொதுமக்களின் தேவையறிந்து அனைத்து வார்டுகளிலும் ஆழ்த்துலாய் அமைத்து கொடுத்த தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் சார்பாகவும்நன்றி தெரிவித்துக் கொள்வதோடு பெரியகுளம் பகுதி பொதுமக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவையான குடிநீர் தேவை கூட பூர்த்தி செய்ய முடியாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் மக்கள் நலனில் அக்கறையில்லாமல் குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சோத்துப்பாறை அணை நீர் கேட்கப்பகுதியில் அணை நீரை திட்டமிட்டு வெளியேற்றி மீன்பிடித்து ஆதாயம் பார்த்து பத்து நாட்களுக்கு மேலாக பேரிச்சம் நீரை அடத்துவைத்து மீன்பிடி நாடகம் ஆடிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக நகர்மன்ற குழு தலைவர் ஓ சண்முகசுந்தரம் தலைமையில்,கவுன்சிலர்கள் முத்துலட்சுமி ராணி கிருஷ்ணவேணி உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments