தாளவாடி அருகே சாலையில் நடமாடிய காட்டு யானையை பார்த்து பைக்கில் சென்ற முதியவர் தவறி கீழே விழுந்து மயிரிழையில் உயிர் தப்பினர்


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வளட்சி நிலவுவதால் காட்டு யானைகள் பகல் நேரங்களில் வனப்பகுதியில் உள்ள சாலைகளில் நடமாடுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில்  மதியம் திம்பம் மலை பகுதியில் இருந்து தலமலை செல்லும் வனச்சாலையில்  ஒரு காரில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில்  காட்டு யானை நடமாடுவதை கண்ட காரில் சென்றவர்கள் காரை நிறுத்தி காட்டு யானையை தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது யானையின் நின்றிருந்த பகுதியில் இருந்து எதிர் திசையில்  பைக்கில் வந்த முதியவர் எதிர்பாராத விதமாக யானையைக் கண்டு அச்சமடைந்து நிலை தடுமாறியதில் பைக் சாலையோர வனப்பகுதியில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. தலையில் ஹெல்மெட் அணிந்திருந்த முதியவர் உடனடியாக சுதாரித்து எழுந்து யானையிடம் இருந்து தப்பித்து ஓடி வந்தார். அப்போது காரில் வந்த ஒரு நபர் முதியவரை அரவணைத்து காப்பாற்றி காருக்கு அழைத்து வந்தார். தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் சாலையில் பகல் நேரங்களில் நடமாடுவதாகவும், எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments