நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வாழ்குடி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் வீரபத்திர பூபதி (வயது 52).அவரது மனைவி வசந்தி (வயது 43) இவர்களுக்கு திருமணம் ஆகி சாய்கார்த்திகா (வயது 19),சாய் சந்தியா (வயது 18) என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.இருவரும் நன்னிலத்தில் உள்ள பாரதிதாசன் அரசு கல்லூரியில் படித்து வருகின்றனர்.இந்த நிலையில் சாய்கார்த்திகா தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒருவரை காதலித்தாக தெரிகிறது.இதனால் சாய் கார்த்திகாவை பெற்றோர் கண்டித்து திருவாரூர் அடுத்த முடிகொண்டானில் உள்ள அவர் உறவினர் வீட்டில் சென்று விட்டு வந்துள்ளனர்.அங்கிருந்து காலேஜ் சென்று வந்த சாய் கார்த்தகா அந்த பையனுடன் ஓடி விட்டதாக தெரிகிறது.இந்த தகவல் கேள்விப்பட்டு முடிகொண்டான் செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தவர்கள் மன விரக்தியில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் திருக்கண்ணபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலின் பெயரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sunday, March 19, 2023
மகள் காதலனுடன் சென்றதால் மன உளைச்சலில் தாய்,தந்தை தூக்கிட்டு தற்கொலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment