கடந்த 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றாவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து ராகுல்காந்தியின் எம்பி பதவியை மக்களவை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து பல்வேறு போராடங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூரில் மாவட்டத்தலைவர் அமிர்தராஜா தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர்கள் என்.செல்வராசு, ஏ.தெய்வாணை,மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் G.கோபிநாத், மாவட்ட எஸ்.சி துறை தலைவர் JKT.ராஜ்குமார்,கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் ஜி.கருணாநிதி,நாகை நகரத் தலைவர் எம்.பி.உதயச்சந்திரன்,கீழ்வேளூர் நகர தலைவர் எஸ்.லியோ,இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.பி.தமிழரசன்,வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.விஷ்ணுவர்த்தன்,உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் இரவு நேரத்தில் திடீரென இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் அமர்ந்து மோடி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த பயணிகள் ரயில் வரும்போது காங்கிரஸ் கட்சியினர் தண்டவாளத்தில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடரந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வழுகட்டாயமாக அவர்களை குண்டுகட்டாக தூக்கி நடைமேடைக்கு இழுத்து சென்றனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியினர் போலீசாரால் தங்களை தாக்குவதாக குற்றம்சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அனுமதியின்றி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 10 க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments