உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம மக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி


உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் இன்று  பல்வேறு  நிகழ்ச்சிகளை தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.அதேபோல் தமிழக முதல்வர் அவர்களின்  அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை  ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர் பேரணியை ஊராட்சி மன்ற தலைவர் M.புஷ்பம் தலைமையில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

 இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து  கொண்ட 300க்கும் மேற்பட்ட  கிராம மக்கள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், மழைநீர் உயிர் நீர் ,தண்ணீரை வீணாக்காதீர், குளங்கள் ஏரிகளை பாதுகாப்போம், நீர்நிலைகளை பாதுகாப்போம்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டனர்.

சூலக்கரை ஊராட்சியை சேர்ந்த300 க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் இந்த நிகழ்வின்போது  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காஜா மைதீன் பந்தே நவாஸ், வட்டாட்சியர் திரு.அறிவழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Post a Comment

0 Comments