சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்

 


 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம்  கல்லூரி முதல்வர் முனைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார் இக்கூட்டத்தில் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்களின்   500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் எதிர்கால முன்னேற்றம் அவர்கள் செயல்படுத்த வேண்டிய நடைமுறைகள், மாணவர்களின் வருகை பதிவு மற்றும் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் குறித்து பெற்றோர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பொங்கியண்னன் நன்றி கூறினார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

Post a Comment

0 Comments