தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தை சேர்ந்த பிரசாந்தன் என்பவரின் மகன் துஷாந்தன் வயது 20 பெயிண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கும் எட்டயபுரம் அருகே உள்ள எம். கோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து 3ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 4ந்தேதி மாணவியை கூட்டிச் சென்றார் இந்நிலையில் இது குறித்து மாணவியின் பெற்றோர் எட்டயபுரம் போலீசில் புகார் அளித்தனர் புகாரின் பெயரில் எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் விசாரணை நடத்தி நேற்று எட்டயபுரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள் முதலில் விசாரிக்கும் பொழுது துஷாந்தன் அந்த மாணவியை மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம் என்று கூறினார்.
மேலும் விசாரிக்கையில் தனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையம் அருகே சென்ற போது அருகில் இருந்த கண்ணாடி துகள்களை எடுத்து தனது கழுத்தை திடீரென அறுத்து கொண்டார் இதனையடுத்து அருகில் இருந்த போலீசார் அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மேலும் இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


0 Comments