தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும், இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையும், கேஸ் சிலிண்டர் விலையையும் கட்டுப்படுத்த தவறியதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியா பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவையை கண்டித்து கோசங்களை எழுப்பினர். அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களுமான 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0 Comments