ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி. இளங்கோ முன்னிலை வகித்தார். மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிச்சாமி , உதவி பொறியாளர் சரவணன் , ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சாவித்திரி,ரத்னா, சுந்தரம், கிருஷ்ணசாமி, வடிவேல் மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments