வேளாங்கண்ணியில் மாற்று வழியில் சாலை அமைப்பது தொடர்பான ஆய்வு பணி நடைபெற்றது


நாகை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான  வேளாங்கண்ணி புனித  ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நாள்தோறும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏராளமான சுற்றுலா பயணிகள் பெருமளவில் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் வருகை தருவதால் சில சமயங்களில்  வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் இருந்து பேராலயம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை குறைக்கும் வகையில்  மாற்று வழியில் சாலை அமைத்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்  அவர்களுக்கு மனு அளிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் சுமார் 10 மீட்டர் அகலமுடைய புதிய சாலை அமைப்பது  குறித்தும், இதற்காக தனியாரிடம் உள்ள நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின் போது பேரூராட்சித் தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, தலைமை நில அளவையர் பாண்டியன், வேளாங்கண்ணி பேரூர் கழக திமுக பொறுப்பாளர் மரிய சார்லஸ், வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments