தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை இன்று பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி தலைமையில்,நகரத் தலைவர் முத்துப்பாண்டி முன்னிலையில் பாஜகவினர் முற்றுகையிட்டு பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாரதிய ஜனதா கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி பேசுகையில் "பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய சோத்துப்பாறை அணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு மீன்களை பிடிப்பதற்காக தண்ணீரைத் திறந்து விட்டு , செயற்கை குடிநீர் தட்டுப்பாட்டை அதிகாரிகளும் . கட்சி நிர்வாகிகளும் ஏற்படுத்தியுள்ளனர். குடிநீர் ஆதாரமாக வழங்கும் சோத்துப்பாறை அணை தண்ணீரை கலங்கப்படுத்திய பொதுப்பணி துறையினர் மற்றும் அரசியல்வாதிகள் -மீது தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் . திராவிட மாடல் அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது இந்த அவலம் அரங்கேறி உள்ளது என்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது 50க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலு,மாவட்டத் துணைத் தலைவர் சஞ்சீவி,எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர்முத்துச்சாமி,வழக்கறிஞர் சன்னாசி பாபு,நகர பொதுச்செயலாளர்கள் நாராயணன், பாலச்சந்தர்,நகர பொருளாளர் சாமிநாதன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் திருவள்ளுவர் கலந்துகொண்டு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.தென்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி பாஸ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0 Comments