ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பை கண்டித்து பவானிசாகர் காமராஜர் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பவானிசாகர் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் நாகமையன் தலைமை தாங்கினார். பவானிசாகர் வட்டார தலைவர் சுப்பிரமணியம், ஈரோடு வடக்கு மாவட்ட காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் முத்துக்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், பமாநில முதன்மை சிறப்பு பேச்சாளர் ஜெயராம், மாநில இளைஞர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோதண்டம், பவானிசாகர் தெற்கு வட்டார தலைவர் முத்துசாமி ஆகியோர் பேசினர்.
இதில் ராஜன்நகர் வெங்கடாச்சலம், மாவட்ட மீனவர் அணி தலைவர் சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தனபால், சத்தி நகர தலைவர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் சின்னசாமி, கவுன்சிலர் பூங்கொடி, வட்டார செயலாளர் சௌந்திரராஜன், புளியம்பட்டி கவுன்சிலர் துரை, சிவாஜி சுந்தரம், சந்தான கிருஷ்ணன், பவானிசாகர் நகர செயலாளர் சிவக்குமார், நகர பொருளாளர் ராமகிருஷ்ணன், பவானிசாகர் மெடிக்கல் பாரதி, சென்னான், புங்கார் இனியன், நாகப்பன், தத்தப்பள்ளி மகேந்திரன், கோடேபாளையம் செல்வன், பவானிசாகர் வட்டார செயலாளர் முருகன், உத்தண்டியூர் கிராம காங்கிரஸ் தலைவர் பாரதி, ஆலாம்பாளையம் செல்வன், வரதன், அம்மாசை, வெல்டிங் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணையதளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன்மூர்த்தி

0 Comments