நம்பியூர் அருகே அரசு அதிகாரிகளை தரை குறைவாக பேசிய டிப்பர் லாரி டிரைவர் கைது


ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் கிராமம் பட்டி மணிகாரம்பாளையத்தில் தனியார் கல்குவாரி உரிமையை புதுப்பிக்காத நிலையில் இயங்கி வந்துள்ளது.

இந்நிலையில் கல் குவாரியில் இருந்து டிப்பர் லாரி மூலம் நம்பியூர் வேமாண்டம் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண் மற்றும் ரப்கல் ஏற்றி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட சுரங்கத்துறை மற்றும் புவியாளர் அலுவலகத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் வாகன சோதனையில் மாவட்ட அதிகாரிகள் லட்சுமி, சிலம்பரசன் ஆகியோர்  ஈடுபட்ட போது பனங்காட்டு பாளையம் அருகில் ரப் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி விசாரணை செய்தனர் அதில் வண்டியின் ஓட்டுனரிடம் ஆவணங்களை கேட்ட பொழுது வண்டியின் ஓட்டுநர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியுள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுரங்கத் துறை மற்றும் புவியாளர் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் காவல் ஆய்வாளர் நிர்மலா விசாரணை மேற்கொண்ட போது கல் குவாரிக்கு முறையான பர்மிட் இல்லை எனவும்,வண்டியின் ஓட்டுனர் அதிகாரிகளிடம் தரக்குறைவாக நடந்து முறையான பதில் அளிக்காததால் அதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் டிப்பர் லாரியை ஓட்டி வந்த நம்பியூர் அருகேயுள்ள குருமந்தூரை சேர்ந்த கதிர்வேல் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கோபிசெட்டிபாளையம் ஜே.எம் 2 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

அதைத் தொடர்ந்து கதிர்வேல் கோபி மாவட்ட சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments