ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் சின்னகுட்டம் மலைப்பகுதியில் பயங்கர தீ விபத்து... தொடர்ந்து தீ பரவி வருவதால் அடிவாரப் பகுதி விவசாயிகள் அச்சம்...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் - தானிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது.இந்த மலை அடிவாரப்பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சின்னக்ட்டம் மலைப்பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டுள்ளது .மாலையில் சிறிதாக ஏற்பட்ட தீ விபத்தானது தற்போது மலைப்பகுதியை சுற்றி  தொடர்ந்து தீ பரவி வருவதால் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.மேலும் மலை அடிவாரப் பகுதியில் ஏராளமான மின்கம்பங்களும் உள்ளன.மேலும் இது குறித்து வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தும்  யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும், சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வரவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.தீ தொடர்ந்து பரவி வருவதால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தீ பரவுவதற்கு முன்பு  தீயை அணைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments