தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிமாதாந்திர கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமை தாங்கினார்.ஆணையாளர் புனிதன் முன்னிலை வகித்தார். நகர்மன்ற கூட்டம் தொடங்கிய நிலையில் அதிமுக சார்பில் நகர மன்ற குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம் எழுந்து பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து கண்டன அறிக்கையை வாசித்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது திமுக நகர மன்ற உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டு கோசமிட்டனர்.
அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் பெரியகுளத்தில் குடிநீர் பிரச்சனைக்கு காரணமானநகராட்சி நிர்வாகத்தையும்,அதிகாரிகளையும், கண்டிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.அதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பெரியகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைக்கு நகராட்சி ஆணையாளர் புனிதன்தான் காரணம் எனக்கூறி கவுன்சிலர்கள் தொடர் அமலியில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் புனிதன் மற்றும் அலுவலர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறி தங்கள் அறைக்குசென்று விட்டனர்.நகர மன்ற உறுப்பினர்களை ஆணையாளர் அவமதிப்பு செய்ததாககூறி நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு,கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.மேலும் கூட்டத்திற்கு ஆணையாளர் வருகை தந்து உரிய பதிலை அளிக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் நகராட்சி அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.சிறிது நேரம்மறுபடியும் கூட்டம் தொடங்கியபோது ஆணையாளரை தவிர மற்ற நகராட்சி அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பொழுது ஆணையாளர் ஏன் கூட்டத்திற்கு வரவில்லை அவரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறி தொடர்ந்து நகரமன்ற உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டு கூட்டத்திலிருந்து திமுக,பாமக,அமமுக,கம்யூனிஸ்ட்,பார்வர்ட் பிளாக் ,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நகரமன்ற உறுப்பினர்கள், வெளிநடப்பு செய்தனர்.மேலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள ஆணையாளர் அறையின் முன்பு நகரமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து கொண்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து நகராட்சி கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தெரிவித்தார்.

0 Comments