விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விருதுநகர் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிபிஐ தேசிய குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கறவை மாட்டின் தீவன விலைக்கு ஏற்ப ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், வலியுறுத்தியும் பால் வழங்கும் பிரதம சங்க உறுப்பினர்களின் கால்நடைகளுக்கு காப்பீடு செய்தல், 50% மானியத்தில் கால்நடை தீவனங்கள் வழங்கிடவும், பிரதம சங்கங்களால் பணிபுரியும் பணியாளர்களுக்கு பணிவரன்முறைப்படுத்தி சம்பளம் நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதம பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

0 Comments