குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 3 நாள் பயணமாக தென் மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப் பயணத்தின் 3வது நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.பி. விஜய் வசந்த் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அரசினர் விருந்தினர் மாளிகைக்குச் சென்றுவிட்டு தனி படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு பயணம் செய்தார். அங்கு திருவள்ளுவர் சிலையை வியந்து பார்த்த குடியரசு தலைவர் அதனைத் தொடர்ந்து விவேகானந்தர் பாறைக்குச் சென்று பார்வையிட்டார்.
மேலும் இதனைத் தொடர்ந்து 10.50 மணிக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் குடியரசு தலைவர் மீண்டும் திருவனந்தபுரம் புறப்பட்டார். குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு குமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர். மேலும் விவேகானந்தர் மணிமண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
No comments:
Post a Comment