ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , சிக்கரசம் பாளையம் ஊராட்சியில் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிக்காக 49 வீடுகளுக்கு மதிப்பீடு 18,60,000 ரூபாய் பணி உத்தரவு ஆணையை வீட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும், சத்தி திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கே .சி .பி. இளங்கோ தலைமை தாங்கினார் . உடன் சத்தியமங்கலம் ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி சுப்ரமணியன் , கே .கே .சேகர் , சி .ஆர் .செல்வராஜ் , எஸ்.ஆறுச்சாமி , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

0 Comments