விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராசு. இவரது மனைவி பாண்டிச்செல்வி. வயது 36. இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.
ராசு மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இன்று மாலை பாண்டிச்செல்வி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீட்டில் மின்சாரம் துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அருகே இருந்த வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரத்தை இழுத்துள்ளார். அப்போது வயரில் இருந்து இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அதை அறியாமல் பாண்டிச்செல்வி கதவை தொட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் பேச்சு மூச்சு இன்றி கிடந்த பாண்டிச் செல்வியை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கன் கூறினர்.
தகவல் அறிந்து வந்த வடக்கு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் பாண்டிச் செல்வி இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment