நாகை அருகே வலிவலத்தில் டிஎன்பிஎஸ்சி அரசு தேர்வை எதிர்கொள்ள ஏர்முனை இலவச பயிற்சி மையம் துவக்க விழா


நாகை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் அரசு தேர்வில் பங்கேற்று வெற்றி பெற ஏர்முனை இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் வலிவலம் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு ஏர்முனை பயிற்சி மைய கௌரவ தலைவர்  பரமேஸ்வரி, எஸ் எம் வி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன் இணைத் தாளாளர் திவ்யா, தலைமை ஆசிரியர் நிர்மலா ஆகியோர்  தலைமை வகித்தனர். ஆந்தகுடி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்  ராஜராஜன் முன்னிலை வகித்தார். ஏர்முனை பயிற்சி மையத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வித்யா அருள்ஜோதி அனைவரையும் வரவேற்றார். முன்னதாக அவர் கூறும் பொழுது, கிராமப்புற மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் விதமாக இந்த ஏர்முனை இலவச பயிற்சி மையம் வலிவலத்தில் தொடங்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சி கொள்வதோடு,  தனித்துவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு தங்கள் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆசிரியர்களை பாராட்டினார். இலவச பயிற்சி மையத்தில் இளைஞர்கள் கலந்து கொள்ள  6381927696 தொலைபேசி எண்  தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகள் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும்  என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏர்முனை பயிற்சி மையத்தின் ஆசிரியர்களான மதிவாணன், மணிமாறன், உதய ராஜா, உதயசங்கர், அனிதா ஆகியோர் டி என் பி எஸ் சி குறித்து விரிவுரை ஆற்றினார். இம்மையத்தில் பயின்று குரூப் 2 பிரிலிமினரி தேர்வில் வெற்றி பெற்ற  அருண், சௌபர்ணிகா காவலர் தேர்வில் வெற்றி பெற்ற சந்தோஷ் ஆகியோரை பாராட்டி புத்தகம் பரிசளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் மணிமாறன் தமிழ் வகுப்பு நடத்தினார்.  நிகழ்வின் இறுதியாக துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments