சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தங்கத்தேர் பராமரிப்பு பணி தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோவிலில் உள்ள தங்கத்தேர்  பழமையான தேராகும். முப்பது ஆண்டுகள்கழித்து தங்கத்தேரை செப்பனிட்டு புதுப்பிக்கும் பராமரிப்பு பணிகள் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்கள் தலைமையில் வீடியோ கவரேஜ் செய்யப்பட்ட நிலையில்  8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பராமரிப்பு பணிகளானது எட்டு நாட்கள் வரை நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments