தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் அமைந்துள்ள எம் எம் வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது கண்காட்சி இணை பள்ளி முதல்வர் முனைவர் பா விஜயகுமார் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இக்கண்காட்சியை திறந்து வைத்தனர் கண்காட்சிகள் துறைவாரியாக மழலையர் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு மாணவர்களும் பாடப்பொருள் சார்ந்து சொந்தமாக தயாரித்த படைப்புகள் மற்றும் அரங்குகளில்
காட்சிப்படுத்தப்பட்டிருந்தன குறிப்பாக கலைத்துறையின் சார்பாக சுமார் 500க்கும் மேற்பட்ட அதிகமான கலையின் நுணுக்கங்கள் ஓவியங்கள் கண்கவர் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
கலைத்துறையின் சார்பாக கடல் வாழ் உயிரினங்களின் அழிவை காட்சிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது பள்ளி முதல்வர் மற்றும் கல்வி இயக்குனர் அனைத்து படைப்புகளையும் பார்வையிட்டு மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்கமூட்டினார் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் சான்றுகளும் வழங்கப்பட உள்ளது.


0 Comments