தேசிய ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது


விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், ஆவியூர் கிராமத்தில்   நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவினை முன்னிட்டு இன்று  மாலை  மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வைத்து  தேசிய ஜல்லிக்கட்டு கமிட்டி தலைவர் திரு.எஸ்.கே. மிட்டல் அவர்கள் தலைமையில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.    இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அருப்புக்கோட்டை உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை, விருதுநகர் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர், காரியாபட்டி வருவாய் வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர், தீயணைப்பு நிலைய அலுவலர், மற்றும் மின் வாரிய துறை அலுவலர்களுடன் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கலந்து கொண்டனர். துறைவாரியாக அந்தந்த துறையினர் செய்ய வேண்டிய பணிகளை முறையாக செய்திட அறிவுறுத்தப்பட்டது. போட்டியில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல்  ஜல்லிக்கட்டு விழாவினை பாதுகாப்பாக நடத்திட ஜல்லிக்கட்டு விழா குழுவினருக்கு  மாடுகளின் கொம்புகளுக்கு குப்பி அணிய வேண்டும் மாடுகளின் மீது வண்ணம் பூசுவது கூடாது ஒரு மினி லாரியில் ஒன்றுக்கு மேற்பட்ட மாடுகள் ஏற்றி வரக்கூடாது முதலான நிபந்தனைகளை விழா குழுவினர்க்கு தெரிவிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments