நாகை அருகே கச்சநகரம் குப்படித்தோப்பு ஶ்ரீ கற்பக விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது: திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள கச்சநகரம் குப்படித்தோப்பில்  ஶ்ரீ கற்பக விநாயகர்  ஆலயம் புதிதாக கட்டப்பட்டது. தொடரந்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு  முதல் கால  யாகசாலை பூஜையுடன் நேற்று துவங்கியது. இன்று காலை இரண்டாம் கால முடிவுற்ற பின்னர் மேளதாள வாத்தியங்களுடன், சிவ வாத்தியங்கள் முழங்க கடங்கள் கோவிலை சுற்றி எடுத்துவரப்பட்டன. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் கோயிலை சுற்றி வட்டம் அடிக்க  கோயிலில் உள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ கற்பக விநாயகருக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை விழா குழுவினரான விழிநாதன், தைன்ராஜ், ஆசிரியர் எம்.செந்தில்குமார் மற்றும் கச்சநகரம்,பனங்காடி கிராம வாசிகள் செய்திருந்தனர்.

Post a Comment

0 Comments