திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடூரிவூல் மத்திய அரசு நிதியிலிருந்து புதியதாக உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்தியாவில் கிராமப்புறத்தில் முதல்முறையாக அதி நவீன வசதிகளுடன் உள் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் கபடி வாலிபால் டேபிள் டென்னிஸ் கேரம் சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தவும் பயிற்சி பெறவும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்டத்திற்கு அமைச்சராக பதவி ஏற்று முதன் முறையாக வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



0 Comments