ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த செண்பகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பரிவார தெய்வமான கால பைரவர் சுவாமிக்கு கல்லினால் சன்னதி அமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலபைரவர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் மங்கள வாத்தியம் மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து பவானி நதிக்கரையில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் முதல்கால பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை செய்யப்பட்டு காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலபைரவர் கோவில் விமான கலசத்திற்கும், காலபைரவர் சிலைக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அபிஷேகம் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

0 Comments